கொரோனா எதிரொலி: இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.!

கொரோனா எதிரொலி: இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.!


Amarnath yatra 2020 cancelled due to corono virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உலகளவில் இதுவரை 2,585,195 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 179,839 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், பல்வேறு முக்கியமான நிகழ்வுகளும் கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒலிம்பிக் போட்டி, ஐபில் போட்டிகள் போன்றவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

corono

இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துவரும்  நிலையில் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளது.