வலிமை அப்டேட்டுக்காக இங்கிலாந்து வரை சென்ற தல ரசிகர்கள்.! வியந்துபோன உலக மக்கள்.! வைரல் வீடியோ.!ajith-fans-ask-valimai-update-in-stadium

வினோத் இயக்கத்தில் தல அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்தின் எந்தவித அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கிய நிலையில், தல ரசிகர்கள் ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தின் அப்டேட்டுக்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர். 

அஜித் ரசிகர்கள் படக்குழு துவங்கி அயல் நாட்டுக்கு கிரிக்கெட் வீரர், முதலமைச்சர், பிரதமர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். ரசிகர்களின் இத்தகைய செயல்களால் அதிருப்தி அடைந்த நடிகர் அஜித் அவர்களை பொறுமையாக இருக்க கூறி அறிக்கையும் வெளியிட்டிருந்தார்.

Valimai updateஇந்தநிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் அஜித் ரசிகர்கள் நேற்று ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். மேலும், பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர் அஸ்வினிடமும் ‘வலிமை’ அப்டேட் கேட்டுள்ளனர். இதனைப்பார்த்த உலக கிரிக்கெட் ரசிகர்களும் வியந்துள்ளனர். இந்த புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.