திருட்டு பசங்களுடன் சண்டையிட்ட இளம் பெண்ணின் தீரம்!.. வைரலான வீடியோ காட்சி.!

திருட்டு பசங்களுடன் சண்டையிட்ட இளம் பெண்ணின் தீரம்!.. வைரலான வீடியோ காட்சி.!



a-young-woman-who-fought-with-bandits

மீரட்டில் வயதான பெண்ணின் கம்மலை இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பறித்து செல்ல முயன்றனர்.

மூதாட்டியுடன் வந்த அவரது பேத்தி துணிசலுடன் அந்த வழிப்பறி கொள்ளையர்களிடம் சண்டை போட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட் மைதா மொகல்லாவில் வசித்து வருபவர் வருண் இவரது தாயார் சந்தோஷ், அவரது பேத்தி ரியா அகர்வாலுடன் லால் குர்தியிலிருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரது காதில் இருந்த கம்மலை பறித்து கொண்டு ஓட முயன்றனர்.​​

அந்த வழிப்பறி கொள்ளையர்களின் வாகனத்தை பிடித்து ரியா சாலையில் தள்ளிவிட்டார். அதன் பிறகு திருடனின் சட்டையை பிடித்து சண்டை போட்டு துணிச்சலுடன் போராடி அவர்களிடமிருந்து ஒரு கம்மலையும் திரும்பப் பெற்றார். இந்நிலையில் ரியாவை தள்ளிவிட்டு கொள்ளையர்கள் ஓடிவிட்டனர். 

இந்த காட்சிகள் அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ரியா திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களிடம் சண்டையிடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து ரியாவிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் விரைவில் குற்றவாளிகளை பிடிப்பதாக உறுதியளித்து உள்ளனர். அதன் பின்னர் காவல்துறையினர் நகரின் புச்டி ரோட்டில் அருகே துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கைது செய்தனர்.