உணவு சார்ந்த வீடியோ வெளியிட்டு, பிரபலமான 33 வயது இளைஞர் திடீர் மரணம்; சோகத்தில் பின்தொடர்பாளர்கள்.!

உணவு சார்ந்த வீடியோ வெளியிட்டு, பிரபலமான 33 வயது இளைஞர் திடீர் மரணம்; சோகத்தில் பின்தொடர்பாளர்கள்.!



a Kochin Food Vlogger Eat Kochi Eat Page Admin Rahul N Kutty Died 

 

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, பனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராகுல் என் குட்டி (வயது 33). இவர் சமூக வலைத்தளங்களில் Eat Kochi Eat என்ற பக்கத்தை நிர்வகித்து, உணவு சார்ந்த வீடியோ வெளியிட்டு பிரபலமானார். 

கடந்த 2015ம் ஆண்டு முதலாக வீடியோ வெளியிட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற ராகுல் குட்டிக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் ராகுல் குட்டி தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உயிரிழப்பு தொடர்பான காரணம் தெரியவில்லை. 

ராகுல் என் குட்டியின் மரணம் தொடர்பான விபரத்தை, அவரின் நிர்வாகிகள் கையாண்டு வந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அவரின் பின்தொடர்பாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.