விடுதியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி விவகாரம்... போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்.!



a-gitl-student-commits-suicide-at-college-hostel-parent

கேரள மாநிலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா (20). இவர்  பொறியியல் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து இவரை மீட்ட விடுதி நிர்வாகம் மற்றும் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

KERALA

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து தங்களது மகளின் தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகம் தான் காரணம் என அவரது பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் அவரது செல்போனை துணைத்தலைவர் பிடுங்கி வைத்துக் கொண்டு  மாலை வரை கொடுமை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். மாணவி குறைவான மதிப்பெண் எடுத்ததாக கூறிய அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மாணவி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கல்லூரி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாக சக தோழிகளும் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு நியாயம் வேண்டி  மாணவ அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.மேலும் தற்கொலை செய்து கொண்ட திருவாங்குளம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஷ்ரத்தா  உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது  அவர் தற்கொலை முயற்சி செய்ததாக கல்லூரி நிர்வாகம் கூறவில்லை என மருத்துவமனையும்  குற்றம் சாட்டி இருக்கிறது. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.