அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்தல் - வெளிநாட்டு பெண் மும்பையில் கைது..!

அயன் திரைப்பட பாணியில் வயிற்றில் போதைப்பொருள் கடத்தல் - வெளிநாட்டு பெண் மும்பையில் கைது..!


a Foreign Woman Smuggling Drug in Stomach Mumbai International Airport Officers Arrest

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படத்தில், போதைப்பொருள் கடத்தல் கும்பல் போதைப்பொருளை வயிற்றுக்குள் கேப்சூல் வடிவில் நிரப்பி கடத்தி செல்லும். இதனை திரை நாயகன் மற்றும் சுங்கத்துறை அதிகாரி கண்டறிவார்கள். 

இந்த நிலையில், இதனைப்போன்ற சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த பெண்மணி சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவரின் உடமைகள் சோதனை செய்யப்பட்டு, உடல் சோதனை நடந்துள்ளது. 

அப்போது, அவரின் வயிற்றில் கேப்சூல்கள் இருப்பது உறுதியாகவே, அவருக்கு இனிமா கொடுத்து அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. சோதனையில், பெண் 214 கிராம் அளவுள்ள 20 போதைப்பொருள் கேப்சூலை வயிற்றில் வைத்து மும்பைக்கு கடத்தி வந்தது அம்பலமானது. 

அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த போதைப்பொருள் மதிப்பு ரூ.10 இலட்சம் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.