வேண்டாம் என விலகியும் உல்லாசமாக இருந்த காதலன்.. கலைந்துபோன கரு., நிர்கதியாய் தவிக்கும் இளம்பெண்.!A fetus aborted by a lover

காதலனால் வற்புறுத்தப்பட்டு பலாத்கார கொடுமையை அனுபவித்த பெண்மணி, கர்ப்பமாகி கருக்கலைப்புக்கு பின் கைவிடப்பட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் சோழ தேவனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் சாகர் (வயது 30). இவர் கணினி பழுதுபார்க்கும் வேலையை செய்கிறார். இப்பகுதியில் செயல்பட்டு வரும் ஆய்வகத்தில் கணினியை பழுது பார்க்க சென்றபோது, அங்கு வேலை பார்த்த இளம் பெண் ஒருவனுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். 

இந்த பழக்கம் இருவருக்கும் இடையே காதலாக மாறவே, இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். உல்லாச வாழ்க்கையில் விருப்பமில்லாத இளம்பெண், காதலன் வற்புறுத்தல் காரணமாக பலமுறை இணங்கியதாக தெரிய வருகிறது. இதற்கிடையே பெண் கர்ப்பமாகியுள்ளார். 

Karnataka State

தான் கர்ப்பமான செய்தியை காதலரிடம் தெரிவித்து திருமணம் குறித்து பெண் வற்புறுத்தவே, பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த கொடூரன், கருவை கலைத்தால் திருமணம் செய்கிறேன் என கருவை கலைக்க வைத்துள்ளான்.

கருக்கலைப்பு பின் பெண்ணை கைவிட்டுள்ளார். திருமணம் குறித்து வற்புறுத்தியபோது சாகர் மாமாயகியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, சோழ தேவனஹள்ளி காவல்துறையினர் விசாரணை நடத்தி சாகரை தேடி வருகின்றனர்.