இந்தியா

DL 3 SEX.. ஒரேயொரு நம்பர் பிளேட்டால் ஸ்கூட்டி ஓட்டுவதையே நிறுத்திய பெண்.. இதுதான் விஷயம்..!

Summary:

DL 3 SEX.. ஒரேயொரு நம்பர் பிளேட்டால் ஸ்கூட்டி ஓட்டுவதையே நிறுத்திய பெண்.. இதுதான் விஷயம்..!

டெல்லி மாநிலத்தில் புதிதாக விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனத்தில், பதிவு செய்யப்படும் வாகன எண்ணின் அர்த்தம் புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியது. பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் பதிவெண் தகடுகள் SEX என்ற வாசகத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் மாவட்டங்களில் வாகன வகையின் அடிப்படையில் பதிவெண் வழங்கப்படும். வெள்ளை நிற நம்பர் பிளேட், கருப்பு நிற எண்கள் தனிநபரின் வாகனமாக அடையாளப்படுத்தப்படும். டெல்லியை பொறுத்த வரையில் DL என்ற எழுத்து டெல்லி மாநிலத்தை அடையாளப்படுத்தும். 

பின்வரும் 2 எண்கள் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தை குறிக்கிறது. C என்ற எழுத்து காரையும், S என்ற எழுத்து இருசக்கர வாகனத்தையும் குறிக்கிறது. டெல்லியை சார்ந்த இளம்பெண்ணின் தந்தை தீபாவளி பரிசாக மகளுக்கு இருசக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார். அந்த வாகனத்திற்கு பதிவெண்ணாக DL 3 SEX 0000 என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எண்களை எண்களாக ஒன்றாக சேர்த்து பிரித்து படித்தால் பிரச்சனை இல்லை. ஆனால், அதனை சற்று கூர்ந்து கவனித்து படித்தால் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது. மேலும், பெண் வெளியே சென்று வரும் போது பலரும் அதனை கிண்டல் செய்துள்ளனர். இதனால் பெண்மணி தனது வாகனத்தை இயக்குவதை தவிர்த்துள்ளார்.


Advertisement