கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொன்ற கொடூர தாய்!.. கைது செய்த போலீசார்..!!

கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகளை கொன்ற கொடூர தாய்!.. கைது செய்த போலீசார்..!!


A cruel mother who killed her daughter with an adulterer

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொலை செய்து, தற்கொலை நாடகம் ஆடிய தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

உத்தர பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் சுசில் வர்மா. இவரது மனைவி ஸ்மிரிதி ராணி வர்மா. இந்த தம்பதியின் மகள் குஷ்பூ வர்மா (16). இவர்கள் சில வருடங்களுக்கு முன் பிரிந்து விட்டனர். கணவரை பிரிந்த ஸ்மிரிதி ராணிக்கு அனில் குமார் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் அறிந்த அவரது மகளுக்கு ,தாயின் செயல் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமை வீட்டில் தற்கொலை செய்த நிலையில், குஷ்பூவின் உடல் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர். குஷ்புவின் தந்தை சுசில் வர்மா தனது மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலரான அனில் மீது புகார் அளித்துள்ளார். 

முதலில், குஷ்பூ தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் ஸ்மிருதி ராணி கூறியுள்ளார். இருவரிடமும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்ததில், குஷ்பூ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன்பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி,  அவர்கள் இருவரையும் மொராதாபாத் சிறையில் அடைத்தனர்.