பிக்பாஸ் நிகழ்ச்சியில் இது மட்டும் தான் இருக்கிறது.! கடுமையாக விமர்சித்த பிரபல நடிகை.!
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு..!
பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு..!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் நிர்வாகிகள் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை காரணமாக கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம், நாடு முழுவதும் நேற்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின், அலுவலகம் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் சி.பி.முகம்மது பஷீர், தேசிய தலைவர் சலாம், தேசிய பொது செயலாளர் நஜீமுதீன், தேசிய செயற்குழு உறுப்பினர் கோயா உட்பட 15-க்கும் அதிகமான முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) கேரளாவில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்புக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.