பெண்கள் நடத்திய பூஜையில் 6 வயது சிறுவன் நரபலி!.. குடி போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்..!

பெண்கள் நடத்திய பூஜையில் 6 வயது சிறுவன் நரபலி!.. குடி போதையில் இளைஞர்கள் வெறிச்செயல்..!


A 6-year-old boy was sacrificed in a pooja conducted by women

புதுடெல்லியில் உள்ள லோடி காலனி பகுதியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள், சிறு சிறு குடிசைகள் அமைத்து வசித்து தங்கியுள்ளனர். அந்த குடிசை பகுதியில் குடும்பத்துடன் தங்கி கட்டிட வேலை செய்து வரும் தம்பதியினரின் மகன் 6 வயது சிறுவன். இந்த நிலையில், அந்த குடிசை பகுதியில் நேற்று முன்தினம்  இரவு சுமார் 11 மணியளவில் சில பெண்கள் பூஜை நடத்தியுள்ளனர். அந்த பூஜையில் 6 வயது சிறுவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

பூஜை முடிந்த பின்பு பெண்கள் மற்றும் பூஜையில் கலந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறிய நிலையில் சிறுவன் மட்டும் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் பூஜை நடந்த பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். நீண்ட நேரம் தேடிய பின்பு தங்களது மகன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், அங்கே தங்கி வேலை செய்துவந்த பீகாரை சேர்ந்த விஜய் குமார் மற்றும் அமீர் குமார் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சிறுவனை கழுத்தை அறுத்து நரபலி கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். குற்றவாளிகள் இருவரும் குடி போதையில் இந்த கொலையை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.