75 வது சுதந்திரதினம்: தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!..சிறுவன் உட்பட 7 பேர் கைது..!

75 வது சுதந்திரதினம்: தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிப்பு!..சிறுவன் உட்பட 7 பேர் கைது..!


75th Independence Day: Terrorist attack plan foiled

மணிப்பூர் மாநிலம், 75 வது சுதந்திர தினத்தை சீர்குலைக்கும் வகையில், தடை செய்யப்பட்ட மக்கள் விடுதலைப்படை இயக்கத்தின் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, தவுபால் மாவட்ட காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினருடன், தவுபால் மாவட்ட காவல்துறையினர் இணைந்து யாரிபோக் பகுதியில் குவிக்கப்பட்டனர். பின்னர் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனை தவிர்த்து வேறு சில பகுதிகளிலும் தேடுதல் தீவிர வேட்டை நடத்தப்பட்டது.

இந்த தேடுதல் வேட்டையின் பலனாக, பயங்கர ஆயுதங்களுடன்  7 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உளவு சொல்லும் ஒரு சிறுவனும் பிடிபட்டான். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெளிமாநிலத்தினரை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.