இந்தியா

சாமர்த்தியத்தால் பலரது உயிரை காப்பாற்றிய 70 வயது பெண்! குவியும் பாராட்டுகள்!

Summary:

70 years lady saved lot of people


கேரள மாநிலம் வர்கலா நகரை சேர்ந்தவர் ருக்குயா பீவி இவர் வழக்கம்போல் வீட்டில் காலையில் கேஸ் ஸ்டவ்வை பற்ற வைத்த போது, கேஸ் கசிந்து சிலிண்டரில் தீ பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்து கொஞ்சம் கூட பதட்டம் கொள்ளாமல், பயம் கொள்ளாமல் ருக்குயா பீவி அந்த கேஸ் சிலிண்டரை வீட்டு வாசலுக்கு வெளியே எடுத்து வந்து பைப் மூலம் தண்ணீரை அதன் மீது ஊற்றியுள்ளார்.

இந்த திகில் காட்சியை பீவியின் குடும்பத்தாரும், அக்கம் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் பயத்துடனே வேடிக்கை பார்த்தனர். இதனையடுத்துய தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மீதி நெருப்பை அணைத்தனர்.

ருக்குயா பீவியின் சாமத்திய செயலால் அவரது குடும்பத்தார் மட்டுமின்றி அக்கம்பக்கத்தினர் உயிரை காப்பாற்றியதோடு வீட்டையும் எந்த சேதமும் இல்லாமல் விபத்தில் இருந்து தூத்துள்ளார்.

இதனையடுத்து ருக்குயா பீவியின் தைரியத்தை கெளரவித்து பாராட்டும் வகையில் அவருக்கு தீயணைப்பு துறை சார்பில் விருது வழங்கப்பட்டது. மேலும் சமுதாயத்துக்கு ருக்குயா பீவி ஒரு முன் உதாரணமாக உள்ளார் என தீயணைப்பு துறை அதிகாரி அவரை பாராட்டி கெளரவித்துள்ளனர்.
 


Advertisement