அதிர்ச்சி சம்பவம்!! அரசு பள்ளியில் சூடான சாம்பாரில் தவறி விழுந்து 7 வயது மாணவி உயிரிழப்பு...

அதிர்ச்சி சம்பவம்!! அரசு பள்ளியில் சூடான சாம்பாரில் தவறி விழுந்து 7 வயது மாணவி உயிரிழப்பு...


7 years old girl fell down in hot sambar vessel in Karnataka

கர்நாடக மாநிலம் கலபுராகி மாவட்டம் அப்சல்பூர் பகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார் 7 வயது சிறுமியான மஹாந்தம்மா ஷிவப்பா தலவார். இந்த சிறுமி கடந்த 16 ஆம் தேதி பள்ளியில் உள்ள சமையலறையில் சமைக்கப்பட்டு கொண்டிருந்த சாம்பாரில் தவறி விழுந்துள்ளார்.

உடனே அந்த சிறுமியை மீட்டு சவுதாபூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அங்கு மாணவிக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக கலபுராகியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுமியின் உடல்நிலை மோசமடையவே உடனே சிறுமியை பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

7 years old girl

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.