நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 5 போலிசார் பலி.. இருவர் படுகாயம்.!

நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 5 போலிசார் பலி.. இருவர் படுகாயம்.!


5 policemen were killed when a car hit a stationary lorry.. 2 were seriously injured.!

ராஜஸ்தானில் நவம்பர் 25ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சாரு மாவட்டத்தின் தாராநகர் பகுதியில் நடைபெறுவதாக அங்குள்ள அனைத்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து அந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக கின்வ்சார் காவல் நிலைய காவலர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுஜான்கார், சாதார் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியுள்ளது.

accident

இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 போலிசார் சம்பவ இடத்திலே பரிதாபாக உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம்  குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த 5 போலீசாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.