பெற்றோர்களே கவனம்.! 4 குழந்தைகளை பலிவாங்கிய மின்விசிறி.!

பெற்றோர்களே கவனம்.! 4 குழந்தைகளை பலிவாங்கிய மின்விசிறி.!


4-children-killed-in-electrocution

உத்திரபிரதேச மாநிலம் பாரசக்வார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த வீரேந்திர குமார், சரோஜ் வீட்டில் மின்விசிறி கருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில், அந்த 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

death

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, 4 குழந்தைகளின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மான்சி, ஹிமான்,ஹிமாங்ஷி,மயங்க் என்ற குழந்தைகள் தான் இந்த விபத்தில் பலியானதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் மின்சாரம் தாக்கியதால் தான் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

death

மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பராட்டா மின் விசிறிக்கு அருகே அந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போதுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.