கொரோனா சமயத்தில் பயங்கரவாதிகள் அட்டூழியம்! உயரதிகாரி உள்பட 4 ராணுவ வீரர்கள் பலி!4-army-man-killed

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ உயரதிகாரி உள்பட 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

கொரோனவால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் இருக்கின்றன. இதனால் உலகின் பல நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது. இந்த கொரோனா சமயத்திலும் காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் எல்லை வழியாக ஊடுருவி இந்திய பாதுகாப்பு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

army

இந்தநிலையில், வடக்கு காஷ்மீர் ஹந்த்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதனால் சுதாரித்துக்கொண்ட இந்திய ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

ஆனாலும் துரதிஷ்டவசமாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த கர்னல் ஒருவர், ராணுவ உயரதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் என 4 பேர் வீர மரணமடைந்து உள்ளனர்.