திடீரென நுழைந்த பயங்கரவாதிகள்.! விரட்டியடித்த இந்திய ராணுவம்! மூன்று பாதுகாப்பு படையினர் வீரமரணம்.!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் எல்லை பாதுகாப்பு பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர்.
குப்வாராவில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சண்டையிட்டு துரத்தி அடித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலின் போது மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மூன்று ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். காயமடைந்த இரண்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் வடக்கு காஷ்மீரை பாதுகாப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.