இந்தியா

தண்டவாளத்தில் மது அருந்திய நண்பர்கள்! இறுதியில் நடந்த திக் திக் நிமிடங்கள்!

Summary:

3 members died in Delhi because of alcohol

நாளுக்குநாள் மது அருந்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் மது பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர். இதனால் பலவிதமான பாலியல் தொல்லைகள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், டெல்லியில் தண்டவாளத்தில் மது அருந்திய 3 பேர் ரயிலில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


 
டெல்லி நங்லாய் ரயில் நிலையம் அருகே 3 பேர் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறிய நபர்கள் மூவரும் தண்டவாளத்தில் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர்.
 
அப்போது அந்த அவ்வழியாக வேகமாக வந்த ரயில், அவர்கள் மீது மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement