18, 20, 25 வயசுதாங்க இருக்கும்!! அணையில் சடலமாக மிதந்த 3 இளம் பெண்கள்!! அதிர்ச்சி சம்பவம்..

3 பெண்களின் சடலங்கள் அணையில் மிதந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஜான்சியில் உள்ளது சப்ரார் அணை. இந்த அணையில் 3 பெண்களின் சடலங்கள் மிதப்பதாக அணையின் ஊழியர் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அணையில் மிதந்து வந்த 3 சடலங்களை மீட்டனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அணையில் சடலமாக மிதந்த பெண்களின் வயது 18 முதல் 20 மற்றும் 25 வயது இருக்கலாம் எனவும், இவர்கள் மத்தியப் பிரதேசத்தின் எல்லையில் உள்ள திகாம்கர் மாவட்டத்தில் இருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மூன்று பெண்களின் சடலங்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளநிலையில், இவர்கள் யார்? என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இளம் பெண்கள் 3 பேர் நீரில் சடலமாக மிதந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.