3 லட்சம் முட்டையில் இருந்து வெளிவரும் 3 கோடி ஆமைகள்..! கடற்கரை முழுவதும் கொத்து கொத்தாக வரும் ஆமைகள்.! வைரல் வீடியோ.!



3 cr tortoise found on sea video goes viral

லட்சக்கணக்கான முட்டைகளில் இருந்து 3 கோடிக்கும் அதிகமான ஆமைகள் குஞ்சுகள் கடலுக்குள் செல்லும் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரிகளில் ஒருவரான சுசந்தா நந்தா அவர்கள் வெளியிட்டுள்ள 26 வினாடிகள் ஓட கூடிய அந்த வீடியோவில் கடல் முழுவதும் ஆமை குஞ்சுகள் நிரம்பியிருக்கும் நிலையில், அவை அனைத்தும் கடலுக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அந்த பதிவில் கூறியுள்ள சுசந்தா நந்தா , கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததால் ஒடிசாவின் கஞ்சம் மாவட்டம் சிவப்பு நிறத்தில் உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும் ஒடிசாவின் தங்க கடற்கரையில் குட்டி குட்டி ஆமைகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.

மார்ச் மதத்தின் மூன்றாவது வாரத்தில் இந்த கடற்கரையில் சுமார் 3.25 லட்சம் ஆமை முட்டைகள் போடப்பட்டதாகவும், தற்போது அதில் இருந்து 3 கோடிக்கும் அதிகமான ஆமை குஞ்சுகள் இந்த கடலுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.