இந்தியாவிலும் ஆட்டத்தை தொடங்கியது கொரோனா வைரஸ்..! 28 பேர் கொரோனோ வைரஸால் பாதிப்பு.!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் வேமகமாக பரவ தொடங்கியுள்ளது. ஈரான், ஜப்பான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த வைரஸ் தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர்கள் மூவரும் தீவிர சிகிச்சைக்கு பிறகு வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பெரிதளவில் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் கொரோனோ தனது ஆட்டத்தை காட்ட தொடங்கியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் ஹைதராபாத் நகரங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.