ஆத்தாடி.. நமக்கே மூச்சுமுட்டுதே.! ஒரு ஆட்டோவிற்குள் இத்தனை பேரா?? அதிர்ச்சியில் உறைந்த போலீசார்கள்.! வீடியோ..

ஆத்தாடி.. நமக்கே மூச்சுமுட்டுதே.! ஒரு ஆட்டோவிற்குள் இத்தனை பேரா?? அதிர்ச்சியில் உறைந்த போலீசார்கள்.! வீடியோ..


27-passengers-travel-in-one-auto

உத்தரப் பிரதேசத்தில் ஆட்டோ டிரைவர் அதிகபட்சமாக 6 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லக்கூடிய தனது ஆட்டோவில் சுமார் 27 பயணிகளை ஏற்றி சவாரி செய்ததைக் கண்டு போக்குவரத்து காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பதேப்பூரில் உள்ள பிந்த்கி கோட்வாலி என்ற பகுதியில் ஆட்டோ ஒன்று விதிகளை மீறி சாலையில் மிகவும் வேகமாக சென்றுள்ளது. இந்த நிலையில் அந்த ஆட்டோவை கண்டு சந்தேகமடைந்த போக்குவரத்து காவல்துறையினர் அதனை துரத்திப் பிடித்துள்ளனர்.

அப்பொழுது போலீசாரை கண்டதும் பதறிப்போன ஆட்டோ டிரைவர் ஆட்டோவை சாலையின் ஓரமாக நிறுத்தியுள்ளார். பின் போலீசார்கள் ஆட்டோவின் உள்ளே இருந்தவர்களை இறங்க கூறியுள்ளார். ஆட்டோவில் இருந்து 5 அல்லது 6 பேர் இறங்குவார்கள் என எதிர்பார்த்தால் கிட்டதட்ட ஆட்டோவிற்குள் ஓட்டுநர் உள்பட 27 பேர் இருந்து இறங்கியுள்ளனர்.

6 பேர் மட்டுமே பயணம் செய்யக்கூடிய ஆட்டோவில் சுமார் 27பேர் மூச்சுமுட்ட பயணம் செய்ததை கண்டு காவல்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆட்டோவை பறிமுதல் செய்து அவர்கள் அபராதம் விதித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.