எமன் எந்த ரூபத்துல வாராருன்னே தெரியல.! நடக்கும் போதே, தடுக்கி விழுந்து.. 18 வயது இளைஞருக்கு சோகம்.! 

எமன் எந்த ரூபத்துல வாராருன்னே தெரியல.! நடக்கும் போதே, தடுக்கி விழுந்து.. 18 வயது இளைஞருக்கு சோகம்.! 


18 years old boy death while walking in an hotel of mathyapradesh

சமீப காலமாகவே இளம்வயது மரணங்கள் அதிகரித்து வருகின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விஷயமாக மாறியுள்ளது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட உயிரிழக்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. 

Mathya pradesh

திருமண விருந்தில் நடனமாடும் நபர் அப்படியே சரிந்து விழுந்து உயிர் இழந்ததை கூட சமீப காலமாக நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலத்தின் ஹோட்டல் ஒன்றில் ஒரு 18 வயது இளைஞர் தடுக்கி விழுந்து இறந்து போன காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி பேரதிர்ச்சியை கொடுத்து வருகிறது. 

18 வயதான அவர் மேசை ஒன்றை தூக்கிக் கொண்டு நடந்து செல்கிறார். அப்போது கால் இடறி அந்த இளைஞர் கீழே விழுந்து மயக்கம் அடைகிறார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகின்றனர். 

Mathya pradesh

மருத்துவமனைக்கு சென்ற பின் அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவை காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.