கண்கலங்கவைக்கும் சம்பவம்.. மணிக்கணக்கில் செல்போனில் கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..

கண்கலங்கவைக்கும் சம்பவம்.. மணிக்கணக்கில் செல்போனில் கேம் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு..


16 years old boy dead who played online game

தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள மணவெளி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்பவரின் மகன் தர்ஷன். 16 வயதாகும் தர்ஷன் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் செல்போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமை தர்ஷன் மணிக்கணக்கா விளையாடியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் காதில் ஹெட்செட் அணிந்து அதிக சத்தத்துடன் தர்ஷன் கேம் விளையாடித்தாக கூறப்படுகிறது. நிலையில் நீண்ட நேரமாக கேம் விளையாடிக்கொண்டிருந்த தர்ஷன் திடீரெனெ மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன அவரது பெற்றோர், தர்ஷனை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

அங்கு தர்ஷனை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.