தலைநகரில் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு;  சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!

தலைநகரில் காற்று மாசுபடுதலை கட்டுப்படுத்த வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு;  சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!



15 yeear old petrol and 10 year old diesel vehicles are banned in delhi

தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை ஏற்படுத்தி வரும் பழைய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

டெல்லியில் காற்று மாசுபாட்டால் மிகவும் பரிதாப நிலை ஏற்பட்டு  உள்ளதாகவும், நிலைமை தீவிரம் அடைந்து விட்டதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் கற்களில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 yeear old petrol and 10 year old diesel vehicle

இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி மதன் லோகுர் தலைமையிலான அமர்வு அளித்த உத்தரவில், “ காலையிலும், மாலையிலும் டெல்லி வீதிகளில் மக்களால் நடக்கமுடியவில்லை என்று நாளிதழ்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் டெல்லியின் ரயில் நிலையங்களில் சென்று பார்த்தால் அங்கு ஏராளமானோர் சைக்கிள் மற்றும் ரிக்சாக்களில் செல்வதை பார்க்க முடிகிறது. 

பாவம் ஏழைகள், அவர்களுக்கு வேறு வழியில்லாமல் தங்கள் வாழ்வாதாரத்திற்காக மாசடைந்த காற்றை சுவாசித்து வெளியே செல்கின்றனர். அவர்களுக்கு டெல்லி மாநில அரசு என்ன பதில் சொல்லும். மாசுபட்ட காற்றை சுவாசித்துக் கொண்டு உயிர் விட வேண்டும் என்று மக்களைப் பார்த்து டெல்லி அரசு சொல்லுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

15 yeear old petrol and 10 year old diesel vehicle

இதனை தொடர்ந்து 15 ஆண்டுகள் பழைமையான பெட்ரோல் மற்றும் 10 ஆண்டுகள் பழைமையான டீசல் வாகனங்களை டெல்லி அரசு சோதனை செய்து, புகையை அதிகளவு வெளிப்படுத்தும் கார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.