15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் மருத்துவமனையில் திருடப்பட்டதாக.... பெற்றோர் குற்றச்சாட்டு...!!

15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் மருத்துவமனையில் திருடப்பட்டதாக.... பெற்றோர் குற்றச்சாட்டு...!!15-year-old girl's body parts were stolen from hospital....Parents accuse...

15 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றச்சாட்டு.

டெல்லியை சேர்ந்த 15 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை இந்து ராவ் ஹாஸ்பிடலில் கடந்த மாதம் 21ஆம் தேதி அனுமதித்தனர். பின்னர் கடந்த 24 ஆம் தேதி டாக்டர்கள் அந்த சிறுமிக்கு குடல் அழற்சி அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்நிலையில் சிறுமி ஜனவரி 26 ஆம் தேதி இறந்துவிட்டார் எனக் கூறி, அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இறுதி சடங்கு செய்யும் போது சிறுமியின் வயிற்றில் வெட்டு தழும்பு விழுந்துள்ளதை உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

இதனால் சிறுமியின் உடலில் இருக்கும் சில உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகத்தனர். இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து காவல் துறையில் புகார் அளித்தனர். டெல்லி காவல்துறையினர் சிறுமியின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

உடற்கூராய்வு செய்ய சிறப்பு மருத்துவர் கொண்ட மருத்துவ வாரியத்தை அமைக்குமாறு டெல்லி அரசை காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது தேஜ் பகதூர் மருத்துவமனையில் சிறுமியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பாக டெல்லி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறிக்கை கிடைத்தவுடன் சிறுமியின் பெற்றோர் சுமத்திய குற்றச்சாட்டு, உண்மையா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.