இந்தியா

நாடாளுமன்ற வளாகத்தில் திடீரென போடப்பட்ட 144 தடை உத்தரவு!

Summary:

144 in parliment area


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவங்கி, டிசம்பர் மாதம் 13- ஆம் தேதி வரை 20 நாட்கள் நடைபெற உள்ளது. இந்தநிலையில் டெல்லியில் நாடாளுமன்ற வளாக பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் விடுதி கட்டண உயர்வை முழுவதும் திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல உள்ளதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அங்கு நிலைமையை கண்காணிக்கும் வகையில் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், மாணவர்கள் பிரச்சனை குறித்து பேச அரசு தரப்பில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் மாணவர்கள் பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கவே விரும்புவதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 


Advertisement