இந்தியா

விபத்தில் சிக்கிய கார்.. உதவ போன இடத்தில் டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

ஆந்திராவில் விபத்துக்குள்ளான கார் ஒன்றினை சோதனை செய்தபோது காரில் 140 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் விபத்துக்குள்ளான கார் ஒன்றினை சோதனை செய்தபோது காரில் 140 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், விபத்து நடந்த காரை மீட்கவும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர். ஆனால் போலீசார் வருவதற்கு முன்பே விபத்து நடந்த காரில் வந்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் காருக்குள் யாரேனும் உள்ளார்களா என போலீசார் சோதனை செய்துள்ளன்னர்.

அப்போது காரின் டிக்கியை திறந்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், விபத்துக்குள்ளான காரின் பின்புறத்தில் சுமார் 140 கிலோ அளவிலான கஞ்சா இருந்துள்ளது. கார் விபத்துக்குள்ளானதால் காரில் கஞ்சாவை கடத்திவந்தவர்கள் கார் மற்றும் கஞ்சாவை அங்கையே விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளன்னர்.

இதனை அடுத்து கார் மற்றும் கஞ்சாவை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement