கள்ளக்காதலால் கொலை வழக்கு! 14 வருடம் ஜெயில் தண்டனை! தளராத முயற்சியால் சாதனை படைத்த மருத்துவர் சுபாஷ்! அதிர்ச்சி பின்னணி!

கள்ளக்காதலால் கொலை வழக்கு! 14 வருடம் ஜெயில் தண்டனை! தளராத முயற்சியால் சாதனை படைத்த மருத்துவர் சுபாஷ்! அதிர்ச்சி பின்னணி!


14 year jail acquist became a doctor

பெங்களூரை சேர்ந்தவர் சுபாஷ் துக்காராம் பாட்டீல். இவர் கடந்த 2002ஆம் ஆண்டு மருத்துவம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அப்பொழுது தான் குடியிருந்த வீட்டிற்கு அருகே திருமணமான பத்மாவதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதுகுறித்து தெரிந்த நிலையில் பத்மாவதியின் கணவர் அசோக் குத்தேதார் சுபாஷை  கண்டித்துள்ளார். இந்நிலையில் அசோக்  தனக்கு இடையூறாக இருப்பதாக எண்ணிய சுபாஷ் அவரை கொலை செய்தார்.

 இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிறையில் இருந்த சுபாஷ் இதழியல் பட்டம் பெற்றார். சிறைத்துறை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு உதவியாக இருந்தும் வந்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுபாஷ் தண்டனை முடிந்து வெளியே வந்தார்.

doctor

அதனை தொடர்ந்து தான் பாதியிலேயே விட்ட மருத்துவ படிப்பை தொடர எண்ணிய அவர் ராஜீவ்காந்தி சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்து பேசியுள்ளார். அவர்களும் அனுமதிக்கவே கல்புர்கியில்  உள்ள கர்நாடக கல்வி குழுமத்தின் மகாதேவப்பா ரேவூரா  மருத்துவக்கல்லூரியில் இணைந்து  2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். மேலும் தன்னை விட 18 வயது குறைந்த மாணவ மாணவர்களுடன் சேர்ந்து படித்த அவர்.அனைத்து தேர்விலும் தேர்ச்சி பெற்றார். மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சுபாஷ் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் இதுகுறித்து சுபாஷ் கூறுகையில் சிறை வாழ்க்கை எனக்கு பல புரிதல்களை ஏற்படுத்தியுள்ளது. கிளினிக்nஒன்றைத் தொடங்கி அதில் சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கும், இராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கும் இலவச சிகிச்சை அளிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.