இந்தியா

கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது ஏற்பட்ட விபத்து! 12 பேர் பரிதாப பலி!

Summary:

12 people died in accident

தெலுங்கானா மாநிலம் கம்மன் மாவட்டத்தின் கோபாவரம் கிராமத்தைச் சேர்ந்த 26 பேர் பேர் ஒரு டிராக்டரில் ஆந்திராவிற்கு வருகை தந்திருந்தனர். வேதாத்ரி என்ற இடத்தில் உள்ள நரசிம்மா சாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தனர். 

இந்தநிலையில், கிருஷ்ணா மாவட்டம், ஜக்கையன்பேட்டை பகுதியில் அவர்கள் சென்ற டிராக்டர் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வேகமாக நிலக்கரி ஏற்றி வந்த லாரி ஒன்று மோதியுள்ளது. லாரி பயங்கரமாக மோதியதில் டிராக்டர் நிலைகுலைந்தது. 

அங்கு ஏற்பட்ட கோர விபத்தில், டிராக்டரில் பயணித்த 2 குழந்தைகள், 8 பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்த 11 பேர் ஜக்கையன்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 


Advertisement