எரிச்சலூட்டிய மகளின் காதல் விவகாரம்: தந்தை செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார்..!

எரிச்சலூட்டிய மகளின் காதல் விவகாரம்: தந்தை செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த போலீசார்..!



1 lakh rupees and will kill the woman by injecting poison

உத்தரபிரதேச மாநிலம், மீரட் மாவட்டத்தை சர்ந்தவர் நவீன் குமார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிறார்.இவரது மகள் ஒரு நபரை காதலித்து வந்துள்ளார். இதற்கு நவீன் எதிர்ப்பு தெரிவித்து, எச்சரித்தும் அவர் அந்த நபருடன் தொடர்ந்து பேசி வந்ததும் தனது காதலை முறித்துக்கொள்ளாததும் தெரிந்ததால் நவீன் ஆத்திரமடைந்துள்ளார்.

இந்த நிலையில், மகளுக்கு காலில் அடிபட்டுள்ளதாக கூறி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். வீட்டில் உள்ள மாடியில் நின்று கொண்டிருந்த போது, அருகில் இருந்த  மரத்தில் தொங்கிய குரங்கை பார்த்து பயந்து தனது மகள் மாடியில் இருந்து கிழே விழுந்துவிட்டதாகவும், அதனால் காலில் காயம் ஏற்பட்டதாகவும் நவீன் கூறியுள்ளார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து வேறொரு மருத்துவமனைக்கு தனது மகளை நவீன் மாற்றியுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரது மகளின் உடல்நிலை திடீரென மிகவும் மோசமடைந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர்.

பரிசோதனையில், விஷமாக மாறக்கூடிய பொட்டாசியம் குளோரைடு ஊசியை அவரது உடலில்  செலுத்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளது. தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர், அங்கிருந்த சி.சி.டி.வி கேமராக்க்களை ஆய்வு செய்தபோது, டாக்டர் உடையில் ஒரு நபர் இளம் பெண் இருந்த அறைக்குள் நுழைவதை கண்டுபிடித்தனர்.

இது குறித்த விசாரணையில், மருத்துவமனையில் வார்டு பாயாக பணியாற்றி வந்த நரேஷ் குமார் என்பவர்  டாக்டர் உடையில் இளம்பெண் அனுமதிக்கப்பட்ட அறைக்கு சென்றது தெரியவந்தது. மேலும், பெண்ணின் தந்தை நவீன் குமார் தனக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்து அப்பெண்ணுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லும்படி தன்னிடம் கூறியதாலேயே அவ்வாறு செய்ததாக காவல்துறையினரிடம் நரேஷ் ஒப்புக்கொண்டார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் இளம்பெண்ணின் தந்தையான நவீனை கைது செய்தனர். மேலும் வார்டு பாய் நரேஷ் குமார், மருத்துவமனை ஊழியாரான பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர். விஷ ஊசி செலுத்தப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.