வெள்ளைப்படுதல் என்றால் என்ன? பெண்களை பாதிக்கும் பிரச்சனையில் மிகமுக்கிய பிரச்சனைக்கான தீர்வு இதோ..!

வெள்ளைப்படுதல் என்றால் என்ன? பெண்களை பாதிக்கும் பிரச்சனையில் மிகமுக்கிய பிரச்சனைக்கான தீர்வு இதோ..!


Whitening Discharge Tamil

வெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலான பெண்கள் தங்களின் வாழ்நாட்களில் சந்திக்கும் பிரச்சனையாகும். இது நோயாக அல்லது ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம். வெள்ளைப்படுதலால் உடலில் இருக்கும் சத்துக்கள் கரைந்துவிடும். உடல் சூட்டுடன் இருப்போருக்கு வெள்ளைப்படுதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 

பெண்ணுறுப்பின் ஈரப்பசை வழவழப்புடன் இருக்க ஹார்மோன்கள் உதவி செய்கிறது என்றாலும், பெண்ணுறுப்பின் திரவ உற்பத்தியே வெள்ளைப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் முதல் மாதவிடாய் தொடங்கும் முன் பருவமடைவதின் அறிகுறியாகவும் இருக்கிறது. 

கருப்பையின் வாயில் நிறமற்ற பிசுபிசுப்புடைய திரவம் இயற்கையாக சுரக்கும். அமிலத்தன்மை கொண்ட திரவம் நோய்க்கிருமிகளை வெளியேற்றும். இதனால் வேறேதும் தொற்று ஏற்படாமல் உடலை பாதுகாக்கும். இந்த திரவம் துர்நாற்றம் இல்லாமல் பூப்படையும் காலத்திலும், மாதவிடாய் 2 நாட்டல் முன்பும் - பின்பும் வெளிப்படும். 

Whitening Discharge

அதனைப்போல, உடலுறவின் உச்சகட்ட நிலை மற்றும் பாலூட்டும் காலத்திலும் சிறிதளவு வெளியேறும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால், பிசுபிசுப்பு தன்மை அதிகரித்து, வெள்ளிப்படுத்தல் நிறம் மாறி தயிர் போல கெட்டிப்பட்டு அல்லது நூல் போல இருந்து, அளவுக்கு அதிகமான துர்நாற்றம்,, அரிப்பு, தோல் சிவத்தல், எரிச்சல், உடல் அசதி போன்றவற்றுடன் வெளிப்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும். 

இனப்பெருக்க காலத்தில் மேற்கூறிய நிறம் மாறுதல் மற்றும் பிற பாதிப்பு இருந்தால் நோயாக மாறவும் வாய்ப்புண்டு. இந்தியாவை பொறுத்தமட்டில் 25 % இளம்பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கிறது.  

Whitening Discharge

வெள்ளைப்படுதல் நோய் காரணங்கள்: 

சுகாதாரம் இல்லாமல் இருப்பது, ஹார்மோன் பிரச்சனை, பாக்டீரியா தொற்றுகள், ஈஸ்ட் தொற்றுகள், பெண்ணுறுப்பில் வாசனையுள்ள சோப்களை பயன்படுத்துவது, கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவது, ஆன்டிபயாடிக் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகளை முறைதவறி உபயோகம் செய்வது pondravaiyagum. 

பிற நோய்களின் அறிகுறி:

கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பைவாய் நீர்க்கட்டி, கருப்பை வாய் நார்த்திசுக்கட்டி, மலச்சிக்கல், கருப்பை இறங்குதல், இரத்த சோகை, பால்வினை நோய்கள் போன்றவை பிற காரணங்கள் ஆகும். 

கவனிக்காமல் விட்டால் ஏற்படும் பிரச்சனை:

வெள்ளைப்படுதலை சரிவர கவனிக்காமல் விடும் பட்சத்தில் கர்ப்பப்பை இனப்பெருக்க உறுப்பில் பிற பிரச்சனைகள் ஏற்படும். சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படலாம். கருச்சிதைவு, குறைப்பிரசவம், கர்ப்பப்பை வாய் அரிப்பு, கர்ப்ப கால சிக்கல் போன்ற பிரச்சனை ஏற்படும். இவ்வாறான பிரச்சனைகள் அல்லது அறிகுறிகள் இருப்பின் மருத்துவரை நாடி ஆலோசனை பெற்று மருந்துகளை எடுப்பது நல்லது.