வால்நட் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

வால்நட் தினமும் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?



valnat

தானியங்களின் ராஜா என அழைக்கப்படுவது  வால்நட்.இந்த வால்நட்டை தினமும் நம் உட்கொள்வதால் பல விதமான நன்மைகள் நம் உடலை வந்து சேர்கின்றன.

வால்நட்களில் இரும்புச்சத்து, ஜிங்க், வைட்டமின் ஈ மற்றும் கால்சியம் அதிகமுள்ளது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.

மேலும் இதில் இருக்கும் ஒமேகா 3 அமிலம் மற்றும் ஆல்பா லினோலிக் அமிலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.

கார்டியோ வாஸ்குலர் பிரச்சினைகள் இருப்பவர்கள் வால்நட் எடுத்து கொள்வது அவர்களின் இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வால்நட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.

பெரும்பாலும் வால்நட்டை பச்சையாக சாப்பிடுவதை விட நீரில் ஊறவைத்து சாப்பிடுவது அதிக பலன்களை வழங்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.