மக்களே உஷார்.. காபி, டீ குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா?..! சிகரெட் மாதிரி தான்.. உயிரே போயிடுமாம்..!!

மக்களே உஷார்.. காபி, டீ குடிப்பதால் இவ்வளவு ஆபத்தா?..! சிகரெட் மாதிரி தான்.. உயிரே போயிடுமாம்..!!


tea-coffee-is-dangerous-to-life

பொதுவாக போதைப்பழக்கம் மட்டும்தான் அடிமையாக்கும் என்று இல்லை. நம்மால் தவிர்க்க இயலாத சில பொருட்களும், உணவுகளும், ஏன் குணங்களும் கூட நம்மளை அடிமையாக்கி விடுகின்றன. சிலருக்கு காலை எழுந்தவுடன் ஒரு டீ அல்லது காபி குடிக்காவிட்டால் நாளே தொடங்காது. ஒரு கப் டீ குடித்தால் எனர்ஜி கிடைக்கும் என்பது உண்மைதான். 

அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கு நாம் அடிமையாகும் பட்சத்தில் கவனமாக இருக்க வேண்டும். காபி மற்றும் டீ உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி முகர்ஜி கூறியிருக்கிறார். மேலும் காபி, டீக்கு பதிலாக சில பானங்களை நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். 

அவற்றை எடுத்துக்கொள்வதன் மூலம் எனர்ஜி கிடைப்பதால் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இயலும். காபி, டீ குடிக்கும் போது கிடைக்கும் எனர்ஜியானது சிகரெட் குடிக்கும் போது கிடைக்கும் எனர்ஜி போலவே தான். ஒரு நாளில் இரண்டு கப் காபி எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு மேல் எடுத்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். 

Tea

ஏனெனில் ஒரு கப் காபியில் 60-70 மி.கி கஃபைன் இருக்கிறது. ஒரு கப் டீயில் இதில் பாதி அளவு கஃபைன் உள்ளது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்த பானங்களை எடுத்துக் கொள்ளும் போது அது எதிர்மறைவிளைவுகளை ஏற்படுத்தி விடும். மேலும் உணவின் மூலம் உடலின் செயல்திறன் மற்றும் எனர்ஜி அளவை அதிகரிக்க இரண்டு வழிமுறைகள் உள்ளன. 

எளிய உணவுகள் மற்றும் நொதிகள் நிறைந்த காய்கறி, பழ ஜூஸ்கள், ஹெர்பல் டீ, கிரீன் டீ, புதினா ஜூஸ், கொத்தமல்லி, தேங்காய், ஆரஞ்சு போன்றவை நம்மை அடிமையாக்காது. அதே சமயம் இயற்கையான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களும் நிறைந்துள்ளது. 

மேலும் பச்சையான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும் உடலுக்கு எனர்ஜி கொடுக்கும். உடலுக்கு தேவையான குறிப்பிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்கவும் இவ்வாறான அறிவுரைகளை நிபுணர்கள் கூறுகின்றனர்.