மிரட்டல் காட்சிகள்.. விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் பட டீசர் இதோ..!
காஃபியை இப்படி குடித்தால், கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. ட்ரை பண்ணினா அசந்துடுவீங்க.!

சுகர்லெஸ் காஃபி
காலை நேரத்தில் சர்க்கரை இல்லாத காபியை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். நம்மில் பெரும்பாலும் காலை எழுந்தவுடன் காபி குடித்து இந்த நாளை தொடங்க விரும்புகிறோம். இதனால் நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருப்பதாக நினைக்கிறோம்.
கலோரிகள் குறைவு
சர்க்கரையை கலந்து காபி குடிப்பதால் அதன் நன்மைகள் நமக்கு கிடைப்பதில்லை. உடலில் தேவையில்லாத கலோரிகளை இது அதிகரிக்கிறது. இதன் காரணமாக, உடல் எடையும் அதிகரிக்க செய்கிறது. சர்க்கரை இல்லாத காபி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
இதையும் படிங்க: ஆண்களுக்கு அபார சக்தி தரும்.. கருவாடு.! குழந்தையின்மையை தீர்க்கும் அற்புதம்.!
மூளைக்கு நல்லது
இதில், இருக்கும் ஆண்ட்டிஆக்சிடென்ட்கள் நம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. காபியில் இருக்கும் காஃபின் ஆற்றல் உற்பத்தி மற்றும் ஆக்சிஜனேற்ற செயல்முறையை அதிகரிக்கிறது. மேலும், இது அறிவாற்றலை மேம்படுத்துவதுடன் மூளையின் செயல்பாட்டையும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மனச்சோர்வு இல்லாமல், நாள் முழுவதும் மிகுந்த உற்சாகமாக இருக்க முடிகிறது.
கல்லீரல் நோய்களை கட்டுப்படுத்தும்
மேலும், இது கல்லீரல் வீக்கம், கொழுப்பு நிறைந்த கல்லீரல் போன்ற நோய்களின் அபாயத்தை இது குறைக்கிறது. நமக்கு ஏற்படும் மனச்சோர்வு, திடீர் மன மாற்றங்கள் போன்றவை இந்த சர்க்கரை இல்லாத காபியின் மூலம் தடுக்கப்படுகிறது. உடலில் தேவையான ஆக்ஸிஜனேற்றம் கிடைக்க இது வழிவகை செய்கிறது.