ஆடு, மாடுகளுக்கு வட்ட வட்டமாக முடி உதிர்தல் பிரச்சனை.. கொசுக்கடி, ஈ தொல்லைக்கு எளிமையான தீர்வு.!



solution for goat cow hair loss and bacterial infection

மழை மற்றும் குளிர் காலங்களில், ஆடு, மாடுகளுக்கு பூச்சி தாக்குதல், பாக்டீரியா தொற்று போன்றவைகளின் காரணமாக பொடுகு மற்றும் வட்ட வடடமாக முடி உதிர்தல் பிரச்சனைகள் இனிவரும் காலங்களில் ஏற்படும். மேலும், கொசுக்கடியும் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டங்களில் அவற்றை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க பலரும் உடலில் வேப்பெண்ணெய் பூசும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இது பாதுகாப்பானதா என்பது பற்றி பார்க்கலாம். 

இந்த வேப்பெண்ணெய் கொசுக்கடி, ஈ தொல்லையில் இருந்து விடுபட பெரிய அளவில் உதவுகிறது. மேலும், விஷ கிருமிகள் உடலுக்கு அருகில் வராமலும் இந்த கசப்பான வாசனை தடுக்கிறது. ஆனால், இது மிகுந்த குளிர்ச்சி மிக்கது. எனவே, ஆடு மாடுகளின் உடலில் இது நேரடியாக படும்பொழுது குளிரினால் மூச்சு திணறல், சளி, உடல் வலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

goat

அதிலும், குறிப்பாக ஆட்டுக்குட்டி மற்றும் கன்று குட்டிகள் இதனால் பெரியளவில் பாதிக்கப்படலாம். வேப்ப எண்ணையை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் இந்த பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம். வேப்பெண்ணையை நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய்களுடன் கலந்து வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில் (மதிய நேரத்தில்) ஆடு மாடுகளின் உடலில் ஸ்பிரே செய்துவிடலாம். 

மேலும், ஆடு, மாடு இருக்கும் இடத்தில்(கொட்டகையில்) வேப்பிலையை கசக்கி ஆங்காங்கே போட்டு வைக்கலாம். அல்லது நெருப்பு மூட்டி அதில் வேப்பிலையை போட்டு புகையை உருவாக்கினால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கலாம். இவ்வாறு, பயன்படுத்துவதன் மூலம் ஆடு, மாடுகளுக்கு நோய் ஏற்படுவது தடுக்கப்படுவதுடன் கொசுக்கடியும் இல்லாமல் பாதுகாக்கலாம்.