
அச்சச்சோ.. தம்பதிகளே உஷார்.. பால்வினை நோய்கள் தெரியுமா?.. மறந்துடாதீங்க..!
பால்வினை நோய்களை தடுக்க மருந்துகள் ஏதும் இல்லை என்றாலும், அவற்றை உடலில் பரவாமல் தடுக்க இயலும். இன்றைய காலங்களில் பால்வினை நோய்களில் கொடுமையானதாக எய்ட்ஸ் மற்றும் கோனேரியா போன்றவை உள்ளது. எய்ட்ஸ் மிக நுண்ணிய வைரஸ் கிருமி ஆகும். இதனை எச்.ஐ.வி என்று அழைக்கலாம்.
எச்.ஐ.வி உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியினை அழித்து, பிற வியாதிகளை உடலில் அதிகப்படுத்தும். 5 வருடங்கள் வரை எந்த அறிகுறியும் ஏற்படவில்லை என்றாலும், பிற்காலத்தில் நோய் அதிகரிக்கும். இதனை தடுக்கவும், அழிக்கவும் மருந்து இல்லை. இதனைப்போல, சிலிபிஸ் என்ற பால்வினை நோய், உடலில் சாதரணமாக ஏற்பட்டு மறையும்.
ஆனால், உடலில் 30 வருடங்கள் காத்திருந்து உள் உறுப்புகளை தாக்கி மரணத்தை ஏற்படுத்தும். கொனோரியா நோய் பெண்களுக்கு 80 % ஏற்படுகிறது. இதனை பலரும் அறியாமல் கடந்து செல்கின்றனர். தோல் மற்றும் பாலின உறுப்புகளில் மாற்றம் இருந்தால் மருத்துவரை நாடுவது நல்லது.
Advertisement
Advertisement