அச்சச்சோ.. ஆண்களே உஷார்.. இந்த மாதிரியான இட்லியால் ஆண்மைக்குறைவு ஏற்படுமாம்.. கவனம் தேவை..!
கடைகளில் அவசர கதியில் சாப்பிடுவோர் இட்லியை வேகவைப்பதை பார்த்துவிட்டு சாப்பிட வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் பிரதான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் உணவுகளில் ஒன்றாக இருப்பது இட்லி. இது உடலுக்கு ஆரோக்கியமான உணவு ஆகும்.
ஆனால், இதன் தயாரிப்பு முறைகளில் உள்ள பிரச்சனைகளால் மனிதர்களுக்கு பேராபத்து ஏற்படும் நிலைகளும் தலை தூக்கியுள்ளது. உணவகங்களில் தயார் செய்யப்படும் இட்லிகளை பருத்தி துணியில் வேக வைக்க வேண்டும். வீட்டிலும் இதனையே செய்வார்கள்.
ஆனால், துரித மற்றும் பிற உணவகங்களில் சட்டத்திற்கு புறம்பாகவும், அலட்சியமாக்கவும் பிளாஸ்டிக் கவரின் மீது மாவை ஊற்றி அதனை வேக வைத்து இட்லியாக பரிமாறி வருகின்றனர். இவ்வாறான பிளாஸ்டிக் இட்லியில் ஆபத்தான ரசாயனங்கள் நிறைந்துள்ளன.
இது தெரியாமல் அல்லது தெரிந்தும் அலட்சியத்துடன் சாப்பிட்டால் புற்றுநோய், இதய நோய், ஆண்மை குறைவு போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இயன்றளவு அனைத்தையும் வீடுகளில் செய்து சாப்பிடுங்கள். கடைகளை நம்பி சாப்பிடுவோர் தயாரிப்பு முறையை கவனியுங்கள். சாப்பிடும் போது கூட பிளாஸ்டிக் கவரை உபயோகம் செய்யாமல் தவிர்க்க வழித்தேடுங்கள்.