இந்த ஒரு கீரையில் இவ்வளவு நன்மைகளா? யாரும் மிஸ் பண்ணாதீங்க! - TamilSpark
TamilSpark Logo
மருத்துவம் லைப் ஸ்டைல்

இந்த ஒரு கீரையில் இவ்வளவு நன்மைகளா? யாரும் மிஸ் பண்ணாதீங்க!

 

பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால்,  நிறைய நன்மைகளைப் பெறலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுப்பது மிகவும் இன்றியமையாதது.

பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், குழந்தைகளின் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். அதுமட்டுமின்றி, பசலைக் கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்து இருப்பதால்,  ரத்த சோகையில் இருந்து விடுபடலாம். மேலும் இது ரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு சிறப்பான உணவுப்பொருள் ஆகும்.

pasalai keerai க்கான பட முடிவு

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இந்த கீரையின் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. கற்களைக் கரைத்து வெளியேற்றும் சக்தி அதற்கு உள்ளது. சிறுநீரகக் கோளாறுகளையும் இது அகற்றுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்கள், பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த கீரையை கீரைகளின் ராஜா என்று கூட கூறுவார்கள். தினமும் ஒரு கப் பசலைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஏனெனில் பசலைக்கீரையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும்.
 


Advertisement


ServiceTree


TamilSpark Logo