ரத்த சோகையா.? கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்.!! முருங்கைக் கீரையில் இருக்கும் அற்புதம் மருத்துவ குணங்கள்.!!moringa-leaves-a-fitting-solution-for-anemia-and-eye-he

முருங்கைக் கீரை நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த சோகையை குணப்படுத்தும் இந்தக் கீரை உடலுக்கு ஆற்றலை தருவதோடு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது. முருங்கைக் கீரையை தினமும் நம் உணவில் எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு கிடைக்கும் சில நன்மைகளை இந்த பதிவில் காணலாம்.

முருங்கைக் கீரையில் இருக்கும் சத்துக்கள்

முருங்கைக் கீரையில் பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்து இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்துக்களும் ஆன்டி ஆக்சிடெண்ட்களும் நிறைந்துள்ளது. தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய உணவுகளில் மற்ற பொருட்களை விட முருங்கைக்கீரையில் அதிகமான அளவு இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. மேலும் இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன.

Healthy life

எலும்புகள் வளர்ச்சியில் முருங்கைக்கீரையின் பங்கு

முருங்கைக் கீரையில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உடலில் எலும்பு வளர்ச்சி யை தூண்டுவதோடு மூட்டு மற்றும் எலும்புகள் வலுப்பெற உதவுகிறது .

இதையும் படிங்க: எச்சரிக்கை... கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவு பொருள்கள்.!! டாக்டர்களின் அறிவுரை.!!

ரத்த சோகை

முருங்கைக் கீரையில் காணப்படும் இரும்பு சத்துக்கள் நம் உடலில் ரத்த சோகை குறைபாட்டை நீக்க முக்கிய பங்கு வகிக்கிறது. முருங்கைக் கீரையை தினமும் உணவில் எடுத்துக் கொள்வதால் நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண்களின் ஆரோக்கியம்

முருங்கைக் கீரையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி சத்து நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் ஏ கண்பார்வை குறைபாட்டை போக்குவதோடு கண்களின் ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.

இதையும் படிங்க: அவித்த வேர்க்கடலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்.!!