முடி உதிர்தலை எளிய முறையில் கட்டுப்படுத்தும் கொய்யா இலையின் ரகசியம்!

முடி உதிர்தலை எளிய முறையில் கட்டுப்படுத்தும் கொய்யா இலையின் ரகசியம்!



Koyya leaves to control hair fall

முடி உதிர்தல் இந்தகாலத்தில் எல்லா வயதினரையும் வாட்டுகிறது. ஆண் பெண் இருபாலருக்குமே இது பெரிய மனசங்கடத்தை உருவாக்கிவிடுகிறது. 

இந்த முடி உதிர்தலை கட்டுப்படுத்த பலர் பலவிதமான முறைகளை கடைபிடிக்கின்றனர். இதில் மிக எளிமையான ஒரு முறையை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள். 

Koyya leaves to control hair fall

கொய்யா இலையை பற்றி நாம் இதுவரை பெரிதாக எண்ணியிருக்க மாட்டோம். வெறும் இலை தானே என்று நினைத்திருப்போம். ஆனால் அந்த கொய்யா இலைக்குள் இவ்வளவு மகத்துவம் இருக்கிறதா என்பது ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுகிறது.

கொய்யா இலையைக் கொண்டு முடி உதிர்தலை எப்படி தடுப்பது என்று இங்கே பார்ப்போம்.

Koyya leaves to control hair fall

தேவையான பொருட்கள் :

ஒரு கைப்பிடி கொய்யா இலைகள்

1 லிட்டர் தண்ணீர்

கொதிக்க வைக்க பாத்திரம்

வடிகட்டி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இந்த கொதிக்கும் தண்ணீரில் கொய்யா இலைகளை போட வேண்டும்.

Koyya leaves to control hair fall

இந்த தண்ணீரை 20 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

தலைமுடியை ஷாம்பு கொண்டு நன்றாக அலசிக்கொள்ள வேண்டும். கண்டிஸ்னர் போட வேண்டாம். தலைமுடி காய்ந்ததும், இந்த கொய்யா இலை தண்ணீரை தலைமுடியில் அப்ளை செய்ய வேண்டும். தலையை நன்றாக 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

Koyya leaves to control hair fall

முடியின் வேர்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். இதனை இரண்டு மணிநேரம் அப்படியே தலையில் விட்டுவிட வேண்டும். பின்னர் மிதமான சூடுள்ள நீரில் முடியை அலச வேண்டும்.

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக இருந்தால், இதனை வாரத்தில் மூன்று முறை செய்ய வேண்டும். முடி நன்றாக வளர வேண்டும் என்றால், வாரத்தில் இரண்டு முறை பயன்படுத்தலாம்.