தூக்கமின்மைக்கு சிம்பிள் தீர்வு.. இந்த பாலை குடிச்சா சொக்கி போயிடுவீங்க.!



kasakasa milk is solution for sleepless night

தூக்கமின்மையால் அவதி

நமது உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளுக்கு முக்கிய காரணமே சரியான தூக்கம் இல்லாமல் போவது தான். பலருக்கு என்ன தான் செய்தாலும் தூக்கமே வராது. அவர்களுக்கு கசகசா கலந்த பால் மிகச்சிறந்த தீர்வு.

கசகசா பால்

kasakasa milk

சிறிது கசகசாவை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளவும். இந்த பாலை அன்றாடம் இரவு ஒரு ஸ்பூன் அளவு குடித்து வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

இதையும் படிங்க: காஃபியை இப்படி குடித்தால், கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. ட்ரை பண்ணினா அசந்துடுவீங்க.!

குடல் புண்ணுக்கு தீர்வு

வயிறு வாய் பகுதிகளில் ஏற்படும் குடல் புண்களை இது ஆற்றும். கசகசா பால் பிடிக்காதவர்கள்,  கசகசாவை வறுத்து பொடியாக்கி பாலுடன் கலந்து நன்றாக கொதிக்க வைத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.