உங்களின் உறக்கத்தை நீங்களே கேள்விக்குறியாக்குகிறீர்களா?.. கட்டாயம் இந்த பிரச்சனையெல்லாம் ஏற்படுமாம்.! உஷார்.!If You Face avoid Sleeping to Occupy This Problems 

 

இரவு நேரத்தில் உறக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதன் நன்மைகள் தற்போது நமக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. ஏனெனில் தொலைக்காட்சி, செல்போன் என நாம் மூழ்கிக் கிடக்கிறோம். அதே போல, அலுவலக நேரத்தில் வேலைகளை பார்த்துவிட்டு, பின் இரவு நேரத்தில் சிறிது பொழுதை கழிக்கலாம் என மணிக்கணக்காக இவற்றை உபயோகம் செய்து, குழந்தைகள் முதல் குடும்பத்துடன் பேச்சுவார்த்தையை தவிர்த்து வருகிறோம். 

அதேபோல, குழந்தைகளும் கூட இவ்வாறான செயல்களை செய்து வருகின்றனர். போதுமான அளவு தூக்கம் இல்லாதது உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் உறங்காத பட்சத்தில் உடல் சோர்வு மட்டுமே ஏற்படும் என அலட்சியமாக இருந்து விடக்கூடாது. தூக்கத்தை தொலைத்தால் நமது ஆரோக்கியமான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படும். 

ஒரே ஒரு நாள் நாம் உறக்கத்தினை இழந்தால் அதிக பசி ஏற்பட்டு சாப்பிட வேண்டியிருக்கும், விபத்து நடப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும், தலைவலி, சளி, எரிச்சல், கோபம் போன்ற உணர்வு அதிகரிக்கும், மூளை திசுக்கள் இயக்கம் பாதிக்கப்படும், எளிதில் உணர்ச்சிவசப்படும் நபராக மாறலாம். கவனக்குறைவு காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கும். 

இவ்வாறாக பல நாட்கள் நாம் தூக்கத்தை இழந்து வரும் பட்சத்தில், பக்கவாதம் ஏற்படலாம். உடல் பருமன் பிரச்சனை உண்டாகும். புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கும். சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்கள் ஏற்படலாம். விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவு, திடீர் உயிரிழப்பிற்கான காரணம் போன்றவை நிகழும். கடுமையான மன அழுத்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அதேபோல, தற்கொலை எண்ணம் ஆட்கொள்ளும். நல்ல உறக்கத்தினை நாம் ஏற்படுத்துவதற்கு இரவு நேரத்தில் நமது மனதை ஒருநிலைப்படுத்தி நன்கு உறங்கினாலே போதுமானது. இரவு நேர உறக்கம் நமக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் ஆகும். மாலை நேரத்தில் அலுவலகத்திற்கு பின் சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, இரவு 9 மணிக்குள் சாப்பிட்டு விட்டு உறங்கி விட வேண்டும். தூக்கத்தை ஏற்படுத்துவதற்காக மருந்துகளை சாப்பிடாமல், இயற்கையாக கிடைக்கும் பழங்களை சாப்பிடலாம். அதேபோல, பகல் நேரத்தில் நாம் வேலை செய்வதை போல, உறக்கத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு நல்லது.