மருத்துவம்

உடலுக்கு நன்மைகளை வழங்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!

Summary:

உடலுக்கு நன்மைகளை வழங்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி.. வீட்டிலேயே செய்வது எப்படி?.!

பல்வேறு நன்மைகளை உடலுக்கு அளிக்கும் முருங்கைக்கீரை சப்பாத்தி எப்படி செய்வது என்பது பற்றி தற்போது காண்போம்.

உணவில் அடிக்கடி முருங்கைக்கீரை சேர்ப்பதன் மூலமாக தாதுசத்துகள் கிடைக்கிறது. அத்துடன் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு வலிமையை அளிக்கிறது.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - ஒன்று
பூண்டு - 5
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
சப்பாத்தி மாவு - ஒரு  கப்
முருங்கைக்கீரை - கால் கப்

செய்முறை :

★முதலில் முருங்கைக்கீரை, வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

★பின் ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவை சேர்த்து, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வேண்டும்.

★அடுத்து அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம், முருங்கைக்கீரை, மஞ்சள்தூள், பூண்டு ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.

★பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

★இறுதியாக மாவை உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் திரட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் முருங்கைக்கீரை சப்பாத்தி தயாராகிவிடும்.


Advertisement