#மகளிர்பக்கம்: அந்தரங்க பகுதியில் எரிச்சல், அரிப்பா?.. என்ன செய்யலாம்.. பெண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

#மகளிர்பக்கம்: அந்தரங்க பகுதியில் எரிச்சல், அரிப்பா?.. என்ன செய்யலாம்.. பெண்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!



how-to-cure-vaginal-itching-problem-woman-tips-tamil

பெண்கள் கெமிக்கல் நிறைந்த பிறப்புறுப்பு அழகு & பாதுகாப்பு பொருட்களை (Vagina Cosmetics) பொருட்களை பயன்படுத்தினால், அதில் உள்ள ஆல்ஹகால் காரணமாக அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை அந்தரங்கப்பகுதியில் ஏற்படும். பெண்கள் யோனி பகுதியில் உள்ள உரோமங்களை நீக்க லேசர் முறைகள், வேக்சிங் போன்ற முறைகளை பின்பற்றினால் சருமம் சிவந்து காணப்படும். இதனாலும் அரிப்பு ஏற்படும். 

இதனை போக்க பிற கிரீம்களை உபயோகம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிறிதளவு தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் இரண்டு முதல் மூன்று முறை போட்டால் யோனியின் அரிப்பு மாயமாகும். ஓட்ஸுடன் 1 ஸ்பூன் சூடான நீர் சேர்த்து கலக்கி, பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து இளம்சூடுள்ள நீரில் கழுவலாம். 

1 ஸ்பூன் பட்டருடன் அரை ஸ்பூன் மஞ்சள் பொடியை சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து சுத்தம் செய்தால் பிறப்புறுப்பு அரிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று சரியாகும். வேப்பிலை இயற்கையான கிருமி நாசினி என்பதால், அதனை அரைத்தும் பூசலாம். அதனைப்போல, கற்றாழை ஜெல்லையும் பிறப்புறுப்பு பகுதியில் தேய்த்து உலரவிட்டு கழுவினால் அரிப்பு பிரச்சனை சரியாகும். 

ஆலோசனைகள்: 

பெண்கள் இறுக்கமான உள்ளாடைகளை தவிர்த்து, காற்றோட்டமான ஆடையை அணிவது சாலச்சிறந்தது. குளித்து முடித்ததும் பிறப்புறுப்பு பகுதிகளை ஈரம் இல்லாதவாறு சுத்தம் செய்ய வேண்டும். முடிந்தளவு பருத்தியினால் ஆன உடைகள் நல்லது. உடலுறவின் போது உராய்வு காரணமாக வலி ஏற்பட்டால் எண்ணெய் உபயோகம் செய்யலாம். கோடையில் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டாம். ஈரமான துணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். பிறப்புறுப்பில் உரோமத்தை நீக்கும் போது கவனமாக இருக்க வேண்டும்.