பனிக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க இயற்கை வழிமுறைகள் இதோ.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!

பனிக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க இயற்கை வழிமுறைகள் இதோ.. அசத்தல் டிப்ஸ் தெரிஞ்சிக்கோங்க.!



how-to-control-winter-season-diseases

 

இயற்கையாக பனிக்காலங்களில் நமக்கு பாக்டீரியா, வைரஸ் தொற்று, சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். பனிக்காலம் மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் ஏற்படும். இக்காலத்தில் ஏற்படும் நோய்கள் இயற்கையானது. அவைகளை தவிர்க்க இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு பண்டங்களை சாப்பிட வேண்டும். 

குடிநீரை குடிக்க கொதிக்க வைக்கும்போது மிளகு / இலவங்கம் சேர்ந்து கொதிக்க விடலாம். காலை நேரத்தில் மூச்சுப்பயிற்சி மேற்கொண்டு மிளகு, துளசி, வெற்றிலை, தேன் சேர்ந்து குடிக்கலாம். இதனால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குளிரை தங்கும் சக்தியும் கிடைக்கும். 

காய்ச்சல் மட்டும் சளித்தொல்லை நீங்க திரிகடுகத்துடன் தேன் சேர்த்து சாப்பிடலாம். தொண்டையில் வீக்கம், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்போர் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டையை நீரில் சேர்த்து குடிக்கலாம். பனிக்காலத்தில் ஏற்படும் பிராணவாயு குறைவு பிரச்னையை சமாளிக்க முருங்கை இலைகளை சுட்டு சாப்பிடலாம். 

health tips

சுண்டைக்காயை உணவில் சேர்துக்கோவது சளி, இருமலில் இருந்து விடுதலை தரும். மலக்கட்டியை தடுக்கும். ஜலதோஷம், தும்மல் போன்ற பிரச்சனையை தவிர்க்க துளசியை சேர்த்து தேநீர் குடிக்கலாம். மூச்சுக்குழாய்க்குள் நுழையம் கிருமிகளை தடுக்க நொச்சி, வேப்பிலை, நுணாவை நீரில் சேர்த்து கொதிக்கவிட்டு ஆவி பிடிக்கலாம். 

கற்பூரவள்ளி, தூதுவளை இலைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சளித்தொல்லை சரியாகும். மூட்டு வலி இருப்பவர்கள் முடக்கத்தான் கீரை தோசை சாப்பிடலாம் அல்லது ரசம் வைத்து சாப்பிடலாம்.