நெஞ்சில் எரிச்சலா?.. எதனால் நெஞ்செரிச்சல் வருகிறது?.. தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?. தெரிஞ்சுக்கலாம் வாங்க.!How to Control Acidity

தற்போதைய காலகட்டத்தில் இளைய சமுதாயத்தினர் ஜங்க் ஃபுட் சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. வயிற்றில் உருவாகும் அமிலமானது வயிற்றுக்குழாய் வழியாக வெளியே வரும் போது இது போன்ற உணர்வு உண்டாகிறது.

மேலும் நெஞ்சு மற்றும் தொண்டை பகுதிகளில் ஒரு வித எரிச்சல் உணர்வு உண்டாகும். இதைத்தான் நெஞ்செரிச்சல் என்கிறோம். அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்படும்போது, இழப்பை உணவு குழாய் ரெப்ளெக்ஸ் பிரச்சினையால் நீங்கள் அவதிப்பட வாய்ப்புள்ளது.

எனவே உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்தது. சில நேரங்களில் அதிக காரமான உணவுகளை உண்பதன் மூலமாகவும் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை தடுப்பதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை குறித்து காணலாம்.

health tips

நெஞ்செரிச்சலை தடுப்பதற்கான சில எளிய வழிமுறைகள் :

நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் வறுத்த உணவுகள், ஆல்கஹால் மற்றும் சோடா போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது. நெஞ்செரிச்சல் பிரச்சனையிலிருந்து விடுபடுவதற்கு வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது அவசியமான ஒன்றாகும். 

குறைந்த அளவில் உணவை பிரித்து உண்பதன் மூலமாக சரி செய்ய இயலும். மேலும் எடை குறைத்தல் போன்றவையும் நெஞ்செரிச்சலை தடுக்க உதவும். கேஸ்ட்ராய்சோ ஃபியெல் ரிஃப்ளக்ஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

மேலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சலை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதற்கு மற்றொரு முக்கிய காரணம் புகைப்பிடித்தல். எனவே இந்த பழக்கத்தை கைவிடுவது மிகவும் நல்லது.