அச்சச்சோ.. இந்த வகையான பழக்கங்கள் உங்களின் எலும்புகளை பாதிக்குமாம்.. மக்களே உஷாராக இருங்கள்.!

அச்சச்சோ.. இந்த வகையான பழக்கங்கள் உங்களின் எலும்புகளை பாதிக்குமாம்.. மக்களே உஷாராக இருங்கள்.!


Health Tips about Bone Strength Tamil

எலும்பு தேய்மானத்திற்கு  வழிவகுக்கும் நிலையே ஆஸ்டியோபோரோசிஸ். 25% ஆண்களுக்கும், 50% பெண்களுக்கும் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த பிரச்சனை ஏற்படும். எலும்பு தேய்மானத்திற்கு சில பானங்களும் காரணம். அவற்றில் முக்கியமானவை குறித்து காணலாம்.

சோடா :

சாஃப்ட் ட்ரிங்குகளில் போஸ்போரிக் அமிலம் இருக்கிறது. இது எலும்பு தேய்மானத்தை அதிகமாக்குகிறது. சோடா குடிப்பவர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 5 மடங்கு அதிகம்.

health tips

ஆல்கஹால் :

அதீத ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் பழக்கமுடையவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை அதிகரிக்கிறது. ஒரு வாரத்திற்கு இவ்வளவு என்றால் கூட தினசரி உபயோகத்தில் அதிகமாக்கப்படும். இது வைட்டமின் டி உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, எலும்பு தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது.

செறிவூட்டப்பட்ட பால் :

செறிவூட்டப்பட்ட பாலால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் முழுமையாக கிடைக்காது. இதனால் இயற்கையாகவே சத்துள்ள பாலை குடிப்பது நல்லது. இது எலும்பு தேய்மானத்தையும் வரவிடாமல் தடுக்கும்.

health tips

இனிப்பு கலந்த ஜூஸ் :

இனிப்பு கலந்த ஜூஸ் எலும்பு ஆரோக்கியத்தில் எதிர்மறையளவை ஏற்படுத்தும். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில், அதிக சர்க்கரை சேர்த்துக்கொள்பவருக்கு எலும்பு தேய்மான பிரச்சினை அதிகம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள பானங்களை தவிர்ப்பதன் மூலம் கால்சியம் மற்றும் எலும்புகளை வலுவாக்க இயலும். எலும்பு தேய்மானத்தையும் சரி செய்து பாதுகாக்க இயலும். அத்துடன் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவாக உடற்பயிற்சி செய்வது அவசியம்.