கியாஸ் உபயோகம் செய்பவர்களே கவனம்.. உச்சகட்ட எச்சரிக்கை., நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து.!

கியாஸ் உபயோகம் செய்பவர்களே கவனம்.. உச்சகட்ட எச்சரிக்கை., நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா ஆபத்து.!



Gas Cylinder Dangerous Tips Tamil

 

தற்போதைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் டெக்னாலஜி நினைத்துபார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வளர்ச்சியில் கேஸ் அடுப்பும் ஒன்று. இந்தியாவில் வழக்கமாக எரிவாயு சமையல் அடுப்புகளை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். 

இதற்கு முக்கிய காரணம் இதனை தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது மிகவும் சுலபம். ஆனால், வீட்டின் உட்புறத்தில் கேஸ் அடுப்புகளை வைத்து சமைப்பதால் வாயு உமிழ்வு ஏற்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 

health tips

காற்று மாசுபாடு :

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியதே காற்று மாசுபாடு. இதனை சுவாசிக்கும்போது நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, அல்சைமர்,  உளவியல் சிக்கல்கள், ஆர்டிசம், ரெட்டினோபதி, கருவளர்ச்சி பாதிப்பு மற்றும் எடை குறைந்த சிசுக்கள் போன்ற பல பாதிப்புகள் உண்டாகும்.

குழந்தைகளின் பாதுகாப்பு :

கேஸ் அடுப்பில் இருந்து வெளியாகும் மாசுபட்ட காற்றை குழந்தைகள் நீண்டநாள் சுவாசித்தால் நுரையீரல் வளர்ச்சியை பாதிக்கும். இது போன்ற மாசுபட்ட காற்றை சுவாசித்து வரும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது அல்லது பிறக்கும்போது ஆஸ்துமாவுடன் பிறக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது. 

health tips

பிரிட்டனில் காற்று மாசுபாட்டால் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதேபோல் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பதிவில் 2.3 மில்லியன் இறப்புகளில் 1.6 மில்லியன் இறப்புகள் காற்று மாசுபட்டால் ஏற்பட்டுள்ளதாக லான்செட் தரவுகள் தெரிவிக்கின்றன.

கேஸ் அடுப்பில் மாசுபாட்டை தவிர்ப்பது எப்படி ?

வீட்டிற்குள் கேஸ் அடுப்பால் ஏற்படும் மாசுபாட்டை முற்றிலுமாக தடுக்க இயலாது. ஆனால் முடிந்தவரை குறைக்க சில முயற்சிகள் எடுக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கண்கள் எரிவது போன்று உணர்ந்தால் ஜன்னல்களை திறந்து வைப்பது மிகவும் அவசியம். 6 மாதத்திற்கு ஒருமுறை கடைகளில் கொடுத்து அடுப்பை முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.